இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #தவிக்கும்தமிழ்நாடு ஹேஷ்டேக்
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை குறித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் #தவிக்கும்தமிழ்நாடு ஹேஷ்டேக்.
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை குறித்து #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தங்கத்தின் விலையை காட்டிலும், தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய விசியாகும்.
இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தகராறு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மக்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து இரவு முழுவதும் தண்ணீருக்காக தெருக்களில் காத்து இருக்கின்றனர்.
இந்தநிலையில், #தவிக்கும்தமிழகம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.