இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் நேற்று புதிதாக 17,897 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் மட்டும் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 61 பேரும், தனியார் மருத்துவமனையில் 46 பேரும் என 107 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 933 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது தமிழக அரசு (Tamil Nadu Government) ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையm புதிய ட்விட்டர் கணக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த ட்விட்டர் கணக்கு மூலமாக மக்கள் மொத்தம் எத்தனை ஆக்சிஜன் சிலிண்டர்கள் (Oxygen Cylinder), படுக்கை வசதி பெறலாம் என்ற தகவலை பெறமுடியும். 


ALSO READ | ஆக்ஸிஜன் உபகரணங்கள் இறக்குமதி மீதான வரிகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு


இதன்படி, தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான காலியாக உள்ள படுக்கைகளை அறியவும்  வெண்டிலேட்டர், ஆக்சிஜன் உதவி கோரவும் முடியும். 


ஏற்கெனவே ஆக்சிஜன் உதவி பெற 104 என்ற இலவச உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது @104GoTN என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கினை தமிழக அரசு தொடங்கவுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை, ஆச்சிஜன் வசதி குறித்து மக்கள் யார் வேண்டுமானாலும் கோரிக்கை விடுக்கலாம்.  


 



 


#BedsForTN என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கொரோனா நோயாளிகள் உதவி கோரலாம். அதேபோல காலியாக உள்ள படுக்கைகள் வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனைகளும் வழங்கலாம். தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தேவைப்படுவோருக்கு தகவல் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகளும், மக்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


ALSO READ | Covaxin விலை குறையும், Bharat Biotech நிறுவனம் அதிரடி அறிவிப்பு!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR