கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க மாட்டோம்: தமிழக சுகாதாரத் துறை
மக்கள் மத்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
மக்கள் மத்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில், திடீரென்று அமேரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது. அதனையடுத்து அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பதிலாக ரம்யாகிரிஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில், கமலுக்கு கொரோனா தொற்று குணமானதை தொடர்ந்து அவர் ஓய்வெடுக்காமல் மீண்டும் பிக்பாஸ் (Bigboss) நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தார். ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது சுகாதாரத் துறையின் கட்டுப்பாடு உள்ள நிலையில், கமல்ஹாசன் அந்த விதிகளுக்கு மாறாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ALSO READ | கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று சொன்னதாக செய்தி வெளியானது.
ஆனால், இது பற்றி தற்போது ஒரு நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவருக்கு குறைந்து அளவு தொற்றே ஏற்பட்டிருந்தது என்றும், மருத்துவர்கள் 3ஆம் தேதி வரை அவர் தனிமையில் இருந்தால் போதும் என அறிவுறுத்தியுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார். எனவே அவர் விதிகளை மீறவில்லை என்பதால், விளக்கம் கேட்கத் தேவையில்லை என தற்போது பேசியுள்ளார்.
ALSO READ | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Telegram Link: https://t.me/ZeeNewsTamil