நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2021, 10:37 AM IST
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் title=

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்த தற்போது மீண்டிருக்கும் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார்.  அதில், உயிரே! உறவே! தமிழே!  நான் நலமாக இருக்கிறேன்,  அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு, ஒன்று மருத்துவம், மற்றொன்று நான் நலம் பெற வேண்டும் என்று எண்ணிய உங்களின் அன்பு, இவற்றால் தான் நான் மீண்டு வந்ததாக நம்புகிறேன். 

ALSO READ Omicron: 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு! மத்திய அரசு கடிதம்!

நான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கூட தொடர்ந்து உழைத்த மக்கள் நீதி மய்யத்தினருக்கு வாழ்த்துக்கள்.  உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் நம் மய்யம், கிராம சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது.  அது மட்டுமே அடையாளமாக இல்லாமல் நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ அதை களத்தில் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை .

kamal

உங்கள் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை புறம் தள்ளி வைத்துவிட்டு வேலையை பாருங்கள் கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து எப்படி பணிபுரிந்தீர்களோ, அதே துணிச்சலோடு மிகவும் ஜாக்கிரதையாக பணியை நீங்கள் செய்ய வேண்டும்.  உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் முக்கியம் கொரோனா தொற்று நீங்கி விட்டது அல்லது போய்விடும் என்ற அஜாக்கிரதையில் இருக்கக்கூடாது என்பதற்கு முன் உதாரணம் நான்.  எனவே  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல முன் ஜாக்கிரதை தற்காப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.

 

நம்முடைய பலமே, நம் தொண்டர்கள் தான்.  அவர்கள் ஆரோக்கியம் எனக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதை செய்துகாட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வணக்கம்" என்று கூறியுள்ளார்.

ALSO READ TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News