தமிழரின் பாரம்பரிய கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனம்...?
தமிழரின் பாரம்பரிய கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனம் அமைக்க கோரிய மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது!
தமிழரின் பாரம்பரிய கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனம் அமைக்க கோரிய மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழரின் பாரம்பரியக் கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனங்களை அமைக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில் நமது பாரம்பரிய கலாச்சாரங்கள், வீரமிக்க கலைகள், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு முறையாக எடுத்து செல்லப்படுவதில்லை. தவறான சித்தாந்தங்கள், திரைப்படங்கள் போன்றவற்றால் ஒழுக்கக்கேடும் பாரம்பரிய கலாச்சார சீரழிவும் ஏற்படுகிறது.
எனவே தமிழர்களின் கலைகளான சிலம்பம், களரி, வர்மக்கலை, வளரிக்கலை உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளும், கரகம், கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளும் அழிந்து வருகின்றன.
இந்த கலைகளை அனைத்தும் அழிந்து விடாமல் காக்க அவற்றை இளம் தலைமுறையினருக்கு கற்பிப்பது அவசியம். எனவே இவற்றை கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நமது பாரம்பரிய கலைகளை பாதுகாக்க அவற்றை பள்ளிக் கல்வித் துறையின் பாடப்பகுதியில் ஒன்றாக சேர்க்க வேண்டும். அழிந்து வரும் கலைகளை முறையான பயிற்றுநர்களை நியமித்து, தற்காப்புக் கலைகளை கற்றுத் தருவதோடு, கற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க வேண்டும்.
இவற்றை நடைமுறைப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி நிறுவனங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, இந்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.