சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை தமிழக அரசு ஜூன் 30-ம் வரை நியமித்தது. இவர்களின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், மேலும் இவர்களின் பதவி காலத்தை தமிழக அரசு நீட்டித்தது. 


தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிக்கக்கூடாது என சென்னை நீதிமன்றத்தில் நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மாநில தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து இந்த மாதம்(ஜூலை) இறுதிக்கு பின்னரே அறிவிக்க முடியும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை தனி அதிகாரிகள் அப்பதவியில் நீடிப்பார்கள் என்று மனுவில் மாநில தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.