சென்னை: தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அடுத்த ஊரடங்கு தளர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் புதிய ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami) ஆலோசனை செய்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 1500-க்கும் கீழ் குறைந்து வருவதால் ஊரடங்கு விலக்கு அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா (COVID-19) வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது, அதில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது அக்டோபர் இறுதியில் விதிக்கப்பட்ட 10 ஆம் கட்டம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அது வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடையயுள்ளது.


ALSO READ |  கனமழை மற்றும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவு: முதல்வர்


 



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR