தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை அடுத்த 3 நாட்களில் அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி வழங்கிட தேவையான நடவடிக்கை கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கடிதம் எழுதினார்.


இதையடுத்து, தமிழகத்திற்கு வழங்கப்படும் நிலக்கரியை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி இன்று மத்திய எரிசக்தி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். அவருக்கு உயர்த்தி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். 
 
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருவதால் 1000 முதல் 1500 மெகாவாட் வரை மின்பயன்பாடு தற்போது குறைந்துள்ளது. இதனால் மின்தேவை அதிகரிக்கும்பட்சத்தில், தேவைப்படும் மின்சாரத்தை உடனடியாக தனியாரிடம் இருந்து வாங்க இயலாது. இதற்காக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் டெண்டர் கோரப்பட்டு, முடிவு செய்யப்பட்ட பிறகே தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியும்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மின்வெட்டுக்கான வாய்ப்பில்லை என்றும், எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.


ஒடிசாவில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால், நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், அடுத்த 3 நாட்களில் தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை அனுப்ப மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.