கமல் முதலில் வார்டு கவுன்சிலராகட்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்
நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு நடிகர் கமல்ஹாசன் கூறியது, தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன், தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் தேர்தல் வந்தால், அதில் என்னுடைய பங்கு இருக்கும் எனவும், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன் என கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் என கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியதை குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். திரைப்படத்தில் வேண்டுமானால் கமல்ஹாசன் முதலமைச்சராக வரலாம். முதலில் அவர் வார்டு கவுன்சிலராக ஆகட்டும் என பதில் அளித்தார்