அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் ரெய்டு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், அ.தி.மு.க-வின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது விடுதியில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தேர்தல் பணப்பட்டுவாடா நடந்ததற்கான, பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமத்துவ மக்கள்கட்சி தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அதிமுக அம்மா அணியின் டிடிவி.தினகரனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அ.தி.மு.க-வின் பல நிர்வாகிகள் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.