அமைச்சர்களையும் சீண்டிப் பார்க்கும் மின்வெட்டு; அதிருப்தியில் அமைச்சர்கள்!
தமிழக அமைச்சர்களின் நிகழ்ச்சிகளிலும் மின்வெட்டு வாடிக்கையாகி வருவது, பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக அரசுக்கும், மின்வெட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 2006 - 2011திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏன் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒரு வேளை தேர்தலில் திமுக தோற்றுப்போனால் அதற்கு மின்வெட்டு தான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட திமுகவில், 10 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற போதும், மின்வெட்டு நின்றபாடில்லை. மின்தடை ஏற்பட துவங்கியதும் திமுகனா மின்வெட்டு, மின்வெட்டுனா திமுக என மக்கள் வசைபாட தொடங்கினர்.
மின்வெட்டுக்கும் திமுக விற்கும் அப்படி என்ன தான் பந்தமோ என மக்கள் புலம்பிக்கொண்டிருந்த வேளையில், மின்வெட்டுக்கு காரணம் அணில்கள் தான் என அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னவுடன், "யாரு சாமி இவரு அண்ணன் செல்லூர் ராஜூக்கே டப் பைட் கொடுக்கிறார்' என கன்டென்ட் கிடைத்த மகிழ்ச்சியில், நெட்டிசன்கள் பொளந்து எடுத்தனர். அமைச்சரின் பதில் அதிமுக,பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நல்லவொரு தீனியாய் அமையவே அவர்களும் தங்கள் பங்குக்கு இஷ்டம் போல வச்சு செய்தனர்.
மேலும் படிக்க | பரந்தூர் விமான நிலையம்; வேலை வாய்ப்பு, இழப்பீடு வழங்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு
நிலக்கரி பற்றாக்குறை தொடங்கி என்னதான் காரணம் சொல்லப்பட்டாலும், மின்வெட்டை கிரகித்துக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை என்பது தான் எதார்த்தம். மக்கள் அதிருப்தி ஒருபுறம் இருக்க, சமீபகாலமாக அமைச்சர்களையும் சீண்டிப் பார்க்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், மின்வெட்டு ஏற்படவே அம்மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு பேசியும் நீண்ட நேரமாக மின்சாரம் வராததால், அமைச்சர் கடுப்பாகி நிகழ்ச்சியை சீக்கிரமாக முடித்துக்கொண்டு வெளியேறினார். அமைச்சரன் கோபம் இரண்டு உதவி பொறியாளர்களுக்கு கேட்காமலேயே பணியிடை மாற்றம் பெற்றுத் தந்தது.
இன்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சென்னை, தியாகராய நகரில் உள்ள காமராஜ் நினைவு இல்லத்தினை ஆய்வு மேற்கொள்ள சென்ற போதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் போன் டார்ச்சை அடிக்க ஒருவழியாக அமைச்சர் சாமளித்துவிட்டு கிளப்பியுள்ளார். தொடர்ச்சியாக அமைச்சர்களின் நிகழ்ச்சிகளின் போது, மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையாகி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
மேலும் படிக்க | பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தை கையில் எடுக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ