பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தை கையில் எடுக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2022, 04:51 PM IST
  • பரந்தூர் பசுமை வழி விமான நிலைய விவகாரம்
  • 4750 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய விமான நிலையம்
  • விமானநிலையத்திற்காக கோவில்களை அழிப்பது சரியில்லை: தொல் திருமாவளவன்
பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தை கையில் எடுக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படுகின்ற நில பரப்பில் இந்த 7கி.மீ தூரம் உள்ள கம்பன் கால்வாய் தூர்க்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அப்படி தூர்க்கப்பட்டால் அதிலிருந்து அந்த கால்வாய் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கும் மற்றும் 58ஏரிக்கும் நீர் நிரப்புவது நின்று விடும்,இது இயற்கைக்கு எதிரானது,செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிடைக்கின்ற குடி நீர் ஆதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படுவதற்காக அரசு கையகப்படுத்தும் நிலத்தில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை அழிப்பதும் ஆரோக்கியமானதல்ல என காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம்,மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் சிங்கிலிபாடி உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் இந்த  புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த பரந்தூர் புதிய  விமான நிலையம் அமைக்க 13 கிராமத்தை சேர்ந்த கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விளை நிலங்களுடன், குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளதாக அறிந்து பரந்தூர்,ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

மேலும் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தொடர்ந்து  பல்வேறு கட்ட போராட்டங்களில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 55வது நாளான  இன்று ஏகனாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் தங்களது கைக்குழந்தைகள், குடும்பத்தாருடன் தரையில் அமர்ந்துக்கொண்டு,கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டும் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பரந்தூர் விமான நிலையம்; வேலை வாய்ப்பு, இழப்பீடு வழங்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

இந்நிலையில் இன்றைய தினம்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான கருத்துகளை கேட்டறிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஏகனாபுரம் கிராமத்திற்க்கு நேரில்  வருகைப் புரிந்தார்.

அப்போது ஏகனாபுரம் கிராமத்திற்கு வருகைப்புரிந்த தொல்.திருமாவளவனின் காலில் விழுந்தும்,கட்டி அணைத்து அரவணைத்தும் வயதாக மூதாட்டிகள் கதறி அழுதப்படி தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என்றும், தாங்கள் இங்கையே வசிக்க எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து ஏகனாபுரம் கிராம மக்கள் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ள பகுதிகளை உள்ளடக்கிய ஓர் வரைப்படத்தை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் நேரில் காண்பித்து எந்தெந்த பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் உள்ளது,நீர்நிலைகள் உள்ளது,விளை நிலங்கள் உள்ளது,என காண்பித்து இப்பகுதிகள் எல்லாம் விமான நிலையம் அமைந்தால் பாதிக்கப்படும், நிலங்கள் கையகப்படுத்தப்படும் என எடுத்துரைத்தனர்.

அதன் பின் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் முன்னிலையிலேயே "வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்", "அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே" என்ற எதிர்ப்பு  கோசங்களை எழுப்பு தங்களது எதிர்ப்பினை பதிவுச் செய்தனர்.

இதன் பின் தொல்.திருமாவளவன் ஏகனாபுரம் கிராம மக்களிடம் தங்களிடம் கோரிக்கை குறித்து நிச்சயமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்களின் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்று வாக்கு உறுதியளித்தும், தங்களின் போராட்டம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பேசினார்.

மேலும் படிக்க | ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்தி தவறானது -அமைச்சர் மூர்த்தி விளக்கம்

இதன் பின் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,1380ஏக்கர் குடியிருப்புகள்,விளை நிலங்கள் அல்லாத அந்த பகுதிகளில் ஏரிகளும்,குளங்களும், குட்டைகளும்,ஓடைகள் மட்டே இருக்கின்றன. 1350ஏக்கர் பரப்பளவுள்ள நீர் பிடிப்பை சேதப்படுத்தி அழித்தால் தான் விமான நிலையம் கட்ட முடியும் என்கின்ற போது அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா  என்று கேள்வி எழுப்பினார்.

சாதாரண மக்களுக்கு ஓர் கொள்கை, இது போன்ற வளர்ச்சி என்ற பெயரில் நீர்பிடிப்புகளை அழிப்பதில்லை தவறில்லை என்பது சரி என்றால், மக்கள் குடியிருக்கும் பகுதி நீர் பிடிப்பு பகுதியாக இருந்தால் அதுவும் சரி தான் என்று சொல்ல நேர்கிறது. இதனை தான் இந்த மக்கள் வாதமாக முன் வைக்கின்றனர் என்று அவர் கேட்டார்.

ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை சுமந்து நிற்கும் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை அழிப்பதும் ஆரோக்கியமானதல்ல...இந்த பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படுவதற்காக அரசு கையகப்படுத்தும் நிலத்தில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்கள் உள்ளன,அவையெல்லாம் அழிக்கின்ற, தரைமட்டமாக்கின்ற நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Best SIP: மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்து 20 ஆண்டுகளில் 1 கோடி வருமானம் பெறலாம்

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு தனது செயல்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும், அதனை மாற்றி நிலங்களை கையகப்படுத்த வேண்டும்,நிலப்பரப்பை மாற்றி கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.இந்த மக்களின் கோரிக்களில் உள்ள நியாங்களை உணர்ந்து அரசு இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.

மேலும் காவேரிப்பாக்கம் பாலாறு அணைக்கட்டில் இருந்து துவங்கி பல்லவ அரசன் கம்பவர்மணால் உருவாக்கப்பட்டு 43கி.மீ. கடந்து ஸ்ரீபெரும்புதூர் ஏரியை அடைவதற்கு 58ஏரிகளை தனது நீர் வரத்தால் நிரம்பொக்கொண்டு சென்னையின் நீர் ஆதரமாக விளங்க கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதரமாக திகழ்ந்து வெள்ள பெருக்கு ஏற்படாமல் விவசாயத்தை காக்கும் கம்பன் கால்வாய் சுமார் 7கி.மீ தூரம் இடிக்கப்படுவது ஏற்புடைவதல்ல,இது முக்கியமான கோரிக்கையாக இம்மக்கள் வைத்துள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பகுதியிலே கம்பன் கால்வாய் என்ற ஓர் கால்வாய் ஓடுகிறது, இந்த பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படுகின்ற நில பரப்பில் இந்த 7கி.மீ தூரம் உள்ள கம்பன் கால்வாய் தூர்க்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அப்படி தூர்க்கப்பட்டால் அதிலிருந்து அந்த கால்வாய் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கும் மற்றும் 58ஏரிக்கும் நீர் நிரப்புவது நின்று விடும்,இது  இயற்கைக்கு எதிரானது,செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிடைக்கின்ற குடி நீர் ஆதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்கிற கருத்தை முதல் கருத்தாக,கோரிக்கையாக இம் மக்கள் முன் வைத்துள்ளார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

மேலும் படிக்க | வானிலை எச்சரிக்கை: தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News