ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சீமானின் எழுச்சியுரை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சீமான் அவர்களின் தலைமையில் பட்டினிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் இன்று 27-02-2017 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை புதுக்கோட்டை மாவட்டம். நெடுவாசல் கிழக்கு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழற் பாதுகாப்பு பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், நெடுவாசல் பொதுமக்கள், பல்வேறு தரப்பு போராட்டக்காரர்கள் திரண்டு விவசாய நிலங்களை மீட்கவும், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியாக சீமான் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து மக்கள்விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து எழுச்சியுரையாற்றினார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.
எழுச்சி உரையும் சில புகைப்படங்கள்:-
தகவல்: நாம் தமிழர் கட்சி