தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆலோசனை
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் போக்குவரத்து மற்றும் காவல் துணை ஆணையர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஐந்தாவது அறிக்கையை மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்டது. அதில் முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதனையடுத்து காவிரி மருத்துவமனை வளாகத்தில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் டெல்லியில் உள்ள திமுக எம்.பிக்கள் சென்னை வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் போக்குவரத்து மற்றும் காவல் துணை ஆணையர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.