பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த கொலை முயற்சி குற்றவாளிகள் கைது..!!!
பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த கொலை முயற்சி குற்றவாளிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்த காவல் துறை, அவர்களிடம் இருந்த பட்டா கத்தி, போதை ஊசிகள், இருசக்கர வானம் ஆகியவற்றை பறிமுதல் செய்தது.
பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த கொலை முயற்சி குற்றவாளிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்த காவல் துறை, அவர்களிடம் இருந்த பட்டா கத்தி, போதை ஊசிகள், இருசக்கர வானம் ஆகியவற்றை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் காவல் துறையில் வழக்கமாக சைக்கிளில் ரோந்து செல்வது வழக்கம், அதுபோல் நேற்றுமாலை உதவி ஆய்வாளர் கார்திகேயன் தலைமையில் 7 சைக்கிள்களில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த 5 பேரை வளைத்து பிடிக்க முயன்றபோது ஒருவன் தப்பியோடிய நிலையில் விஜய் (எ) பிரதிப், கருப்பு லோகேஷ் (எ) லோகேஷ்வரன், தங்கதுரை, ஆலன்ராஜ் ஆகிய 4 பேர் பிடிபட்டனர்.
ALSO READ : பொதுவழி விட மறுத்த குடும்பத்தை கம்பிவேலியில் 4 நாட்களாக சிறை வைத்த சங்கராபுர மக்கள்
அவர்களிடம் இருந்து பட்டாகத்திகள், போதை ஊசிகள், 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த நிலையில், விஜய் (எ) பிரதிப், கருப்பு லோகேஷ் (எ) லோகேஷ்வரன் அகிய இருவரின் மீது ஏற்கனவே தாம்பரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
அதனால் வழிபறி செய்ய கூட்டாக இருந்தனரா அல்லது யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டனரா என விசரணை நடைபெற்று வருகிறது. மேலும் தப்பியோடிய டேவிட் என்பவனை தேடிவருகிறார்கள். தாம்பரம் போலீசார் சைக்கிளில் மிதவேக மாக ரோந்து செல்லும் போது பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த கும்பலை மடக்கி பிடித்த சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
ALSO READ : கோவை மாணவி தற்கொலை வழக்கில் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR