உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் விரும்பி கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் பண்டிகை. இந்நன்னாளில் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடுவது நமது பாரம்பரியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் ஒருபகுதியான இடைவிடாத பணிச்சுமையிலும் காவல் துறையினர் தங்களது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காவலர்களிடையே நிச்சயம் மனச்சுமையினை குறைக்கும் என்பதில் மாற்றமில்லை.


அன்னூர்


 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அன்னூர் காவல் நிலையத்தில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக  கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் நித்யா, உதவி ஆய்வாளர்கள் சிலம்பரசன்,வெங்கடேஸ் மற்றும் காவலர்கள் தங்களது வழக்கமான காக்கி சீருடையை அணியாமல் தங்களது வீடுகளில் கொண்டாடுவது போல் பாரம்பரிய முறையில் ஆண்கள் வேட்டி,சட்டை அணிந்தும்,பெண்கள் சேலை அணிந்தும் கலந்து கொண்டனர்.



காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதனை தொடர்ந்து பாரம்பரிய மிக்க நாட்டு மாட்டு வண்டியில் அவர்கள் பயணம் செய்தும், மாடுகளுக்கு உணவு வழங்கியும் மகிழ்ந்தனர்.



இதனையடுத்து கடவுளுக்கு படைத்த பொங்கலை சக காவலர்களுக்கும், அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்தும் பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சியின் இறுதியாக குழுவாக புகைப்படம் எடுத்தும், பொங்கல் என சப்தமிட்டும் பொங்கலை கொண்டாடினர்.


ALSO READ | பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு..! திமிரும் காளைகள்.. சீறும் காளையர்கள்



 ALSO READ | மாட்டுப் பொங்கலை இப்படியும் கொண்டாடலாம்..! உகந்த நேரம் எது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR