தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள குடகில் உள்ள பேடிங்டன் சொகுசு ரிசார்ட்டை சுற்றி தமிழக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக(இபிஎஸ் & ஓபிஎஸ்) செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன. இதனால் அதிமுக துணை பொது செயளார் தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகியது. இவர்கள் தமிழக முதல்வராக பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கை உட்பட தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.


அதன்பிறகு புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டை தங்கியிருந்தனர். பின்னர் குடகில் உள்ள பேடிங்டன் சொகுசு ரிசார்ட்டில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சட்ட விரோதமாக தினகரன் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வந்தது. இதனையடுத்து எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள குடகு பேடிங்டன் சொகுசு ரிசார்ட்டிற்கு மப்டியில் தமிழக போலீசார் சென்றனர். அங்கு சென்ற பின் மப்டி போலீசார் தங்கள் போலீஸ் உடைக்கு மாறினார்கள். பின்னர் சில போலீசார் ரிசார்ட்டிற்குள் சென்றதாக தகவல் வந்துள்ளது.