சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் (Bharatiya Janata Party) கொடிக் கம்பத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு வாரத்திற்கு முன்பு ஜலகண்டாபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும். திமுக அரசை (DMK Govt) எதிர்த்தும் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ALSO READ | தமிழக அரசின் கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது: அண்ணாமலை


ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பாஜகவினர் இருநூறு பேர் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகே கொடிக்கம்பத்தை நடுவதற்கு முயன்றனர். அதை ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர் தடுப்பையும் மீறி பாஜகவினர் கொடிக்கம்பத்தை (BJP Flagpole) நட்பு கொடியை ஏற்றினர். 


இதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் அங்கு அதிரடி படையுடன் வந்த சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் பாஜகவின் கொடிக்கம்பத்தை அகற்றி அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



ALSO READ | Big Statement: எங்கள் முடிவில் சில தவறுகள் இருக்கலாம்! தளுதளுக்கும் அமித் ஷா



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR