தமிழக அரசின் கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது: அண்ணாமலை

தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்குவதற்காக உரிமத்தை பெறுவதிலும் கரப்ஷன் முட்டுக்கட்டை இடுகிறது. இதை எல்லாம் தவிர்த்தால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 10:41 AM IST
தமிழக அரசின் கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது:  அண்ணாமலை  title=

தமிழக அரசின் கடன் சுமைகளுக்கெல்லாம் மத்திய அரசால் பொறுப்பேற்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய அண்ணாமலை (Annamalai), அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

தமிழகத்தில் திமுக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. திட்டங்களில் நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் பெறுகிறார்கள், முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்யும்போது 4% கமிஷனை பெறுகிறார்கள். தமிழகத்தில் ஒரு குடும்பமே ஆட்சி செய்து வருகிறது. 

வட்ட செயலாளர், கிளை கழக செயலாளர் என ஒருவரும் திமுக களத்தில் பணி செய்வது இல்லை. 

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் தமிழக மக்கள் பேசத் தொடங்குவார்கள் என்ற அவர், 

தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அப்படியே காப்பி எடுத்து அவற்றை மாநில அரசு திட்டம் என்ற பெயரில் புதிய வடிவில் செயல்படுத்தி வருகிறது என்றார். 

தமிழக அரசுக்கு புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் கண்டுபிடித்து செயல்படுத்துவதற்கான திறன் இருப்பதாக தெரியவில்லை  என அவர் குறை கூறினார். 

தமிழகத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை பாழ்படுத்தக்கூடாது என்றார். 

ALSO READ | 'பொறுமையை சோதிக்காதீங்க’ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆவேசம் 

மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடு தோறும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன்  செயல்படுத்தி வரும் திட்டத்திலும் தமிழகத்தில் திமுக கரப்ஷன் செய்கிறது.

தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்குவதற்காக உரிமத்தை பெறுவதிலும் கரப்ஷன் முட்டுக்கட்டை இடுகிறது. இதை எல்லாம் தவிர்த்தால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று அவர் கூறினார். 

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிறப்பப்படுவதற்கு நிதியமைச்சர் உரிய திட்டத்தை அறிவிப்பார். 

தமிழக அரசின் (TN Government) கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. தமிழக அரசு தமிழகத்தில் வருவாய் அதிகரிக்கக்கூடிய புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார். 

தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் இல்லை. காவல்துறை திமுகவின் மாவட்ட செயலாளர் கையில் உள்ளது. அதனால் தான் ஆணவ கொலைகள் அதிகரித்து வருகின்றன அன்று அவர் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்கள் பாழ் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ALSO READ | திரைப்படத்துறை மீதான விமர்சனங்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்- அண்ணாமலை

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

 

Trending News