திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யப்போகுவதாக தகவல்?
தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போகுவதாக தகவல் வந்துள்ளது.
ஜெயலலிதா இறந்த 20 நாளில் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. மேலும், இரண்டே மாதத்தில் முதல்வராக முயற்சித்தார். இது சமூக வலைதளங்களில் மற்றும் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று அரசு சார்பில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
சென்னை அண்ணாநகர் இல்லத்தில் முன்னாள் சபாநாயகரும், அதிமுக-வின் மூத்த தலைவருமான பி.எச் பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சசிகலாவுக்கு பொதுச்செயலாளர், முதல்வர் ஆகும் தகுதி இல்லை என பி.எச்.பாண்டியன் கூறினார். அதேபோல மனோஜ் பாண்டியன் அவர்கள் சசிகலா முதல்வராக வர அனுமதிக்க மாட்டேன் என ஜெயலலிதா எங்களிடம் உறுதியளித்திருந்தார் எனக்கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. 234 பேரில் மூன்றில் ஒரு பகுதி எம்.எல்.ஏ.,க்கள் இல்லாமல் ஆட்சியை தொடரமுடியாது. 78 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால் போதும் இடைத்தேர்தல் வைக்க வாய்ப்பு இல்லை. 355 சட்டத்தின் படி ஆட்சியை முடக்கி வைக்கலாம். கவர்னர் 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்க அதிகாரம் உள்ளது.
இப்படி திமுக செய்தால் வரவேற்போம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்காகக் கூட எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.