தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல், 9, 10, +1 மற்றும் +2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- 50% மாணவர்களுடன் பள்ளிகள் (TN Schools) திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- முதல் நாளில் 50% மாணவர்களும், மறு நாள் எஞ்சிய 50% மாணவர்களுக்ம் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும்.
- பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
ALSO READ: தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதியில் ராஜ்யசபா தேர்தல்
- கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.
- முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் பட வேண்டும்.
- பள்ளிகள் வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
எனினும், கொரோனா தொற்றின் நிலை சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் படி, செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதன் பிறகு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் (Tamil Nadu) நேற்று 1,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நேற்று வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,225 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,570 ஆக அதிகரித்துள்ளது.
ALSO READ: TN Corona Update ஆகஸ்ட் 17: தமிழகத்தில் இன்று 1804 பேருக்கு புதிதாக பாதிப்பு, 32 பேர் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR