போக்குவரத்து பாதிப்படையாது! அண்ணா தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்குவர்
நாளை மறுநாள் தொடங்கும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்காததினால் தமிழகத்தில் பேருந்துகளையும், ரயில்களையும் இயக்குவதில் இடர்பாடு இருக்காது என்று தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறுகையில்,
"மாநில அரசும் தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை, சம்பள உயர்வு, ஓய்வூதியம் பெறுவோர் நிலுவை தொகை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாபடாமல் உள்ளன. இதனால் மத்திய அரசை மட்டும் குறை கூறுவது ஏற்க முடியாது.
இதன் காரணமாக அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்காது. சங்கத்தினர் பேருந்துகளை இயக்குவார்கள். அரசு போக்குவரத்து கழகங்களில் 50,000 முதல் 60,000 போக்குவரத்து தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பொதுமக்கள் நலன் கருதி போராட்ட நாட்களான மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் பணியில் ஈடுபடுவார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | ‘ஜெல்லி’ மீன்களால் பறிபோன நீச்சல் வீராங்கனையின் கனவு.!
இதேபோல் மதுரை விமான நிலையத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளிக்கையில், இது குறித்து பேசினார். அப்போது அவர், "மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரித்தாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இதே போல ரெயில் போக்குவரத்திலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வழக்கம் போல அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மார்ச் 28, 29ல் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது! - தமிழக அரசு
எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள், உள்ளூர், நகர்புற வழி ரயில்களும், வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய ரெயில்களும் குறித்த நேரத்தில் இயக்கப்படும் எனவும், தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து டெப்போக்கள், ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR