தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
TN Rain: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழையும், சில பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
25.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்; திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
28.07.2022, 29.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கொடைக்கானல் (திண்டுக்கல்), தல்லாகுளம் (மதுரை), நிலக்கோட்டை (திண்டுக்கல்) தலா 5, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 4, மதுரை தெற்கு (மதுரை), பெருந்துறை (ஈரோடு), சோளிங்கர் (இராணிப்பேட்டை), விரகனூர் அணை (மதுரை) தலா 3, ஆலங்குடி (புதுக்கோட்டை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), ஈரோடு PTO (ஈரோடு), கெட்டி (நீலகிரி), சித்தம்பட்டி (மதுரை), திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 2, நத்தம் (திண்டுக்கல்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பொன்னை அணை (வேலூர்), கள்ளிக்குடி (மதுரை), கூடலூர் பஜார் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), மதுரை விமான நிலையம் (மதுரை) , விருத்தாசலம்_KVK தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை
மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.
மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ