தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது பொது விவாதம் ஆரம்பம்
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம் தொடங்குகிறது. இந்த கூட்டம் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும்.
கடந்த மார்ச் 16-ம் தேதி 2017- 18 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரைக்கு பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டம் மார்ச் 24 வரை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதில், பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதன் பிறகு பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.