தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) தமிழ்நாடு மாநிலத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.  தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE), தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான (TNEA 2022) தரவரிசைப் பட்டியலை இன்றைய தினம் அதாவது 16 ஆகஸ்ட் 2022 வெளியிட்டுள்ளது.  DOTE மற்றும் TNEA 2022 இன் கூடுதல் இயக்குனர் டி.புருஷோத்தமன், தமிழக உயர்கல்வி அமைச்சர் காலை 10:30 மணியளவில் TNEA தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.  TNEA தரவரிசைப் பட்டியல் 2022 கணிதம் -100, இயற்பியல் - 50, மற்றும் வேதியியல் - 50 ஆகியவற்றில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.  தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, TNEA 2022 கவுன்சிலிங் செயல்முறை தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே திறக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்


TNEA 2022 தரவரிசைப் பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கே காண்போம்:


- மாணவர்கள்  tneaonline.org என்கிற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.


- “TNEA தரவரிசைப் பட்டியல் 2022” என்ற லின்க்கை கிளிக் செய்யவும்.


- மின்னஞ்சல் ஐடி மற்றும் பாஸ்வேர்டு போன்றவற்றை உள்ளிட்டு லாக் இந்த செய்யவும்.


- இப்போது TNEA 2022 தரவரிசைப் பட்டியல் திரையில் காட்டப்படும்.


அந்த தரவரிசைப் பட்டியலைப் டவுன்லோடு செய்து, எதிர்காலக் தேவைக்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.  TNEA 2022 நான்கு சுற்று ஆலோசனைகளைக் கொண்டிருக்கும் - சாய்ஸ் நிரப்புதல், அலாட்மென்ட், அலாட்மெண்டை உறுதிப்படுத்துதல் மற்றும் கல்லூரிக்கு அறிக்கை செய்தல் மற்றும் அவர்களின் உறுதிப்படுத்தலைப் பொறுத்து கட்டணம் செலுத்துதல் ஆகியவை.


மேலும் படிக்க | பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ