சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில் வழக்கில் ஏற்கனவே முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள், 19.06.2020 அன்று மாலை, காமராஜர் பஜாரில் இருந்து ஜெயராஜை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று, அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாக சித்திரவதை செய்து, கடுமையான காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். அதன் பின் தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சுவர்களிலும் , தரையிலும் மற்ற இடங்களிலும் பரவிய பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் காயங்களில் இருந்து கசிந்த இரத்தத்தை சுத்தப்படுத்துமாறு குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் இறந்த பென்னிக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பொதுவான நோக்கத்துடன் குற்றவியல் சதித்திட்டம் தீட்டி உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!
மேலும் நீதிபதி இரத்தக் கறை படிந்த துணிகள் பார்த்துவிடுவார் என்ற அச்சத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரின் உடைகள் மீண்டும் மருத்துவமனையில் மாற்றப்பட்டன. இறந்தவரின் துணிகளை மாற்றிய பிறகு, இறந்தவரின் இரத்தக் கறை படிந்த லுங்கிகளை குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் குப்பைத் தொட்டியில் வீசி உள்ளதாகவும், சாத்தான்குளம் காவல் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தகரை ஆகிய இரண்டும் தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், சிபிஐ யின் குற்றசாட்டு உறுதியாகிறது எனவும், இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை ஆகியோர் காவல் நிலையத்தில் தந்தை மகன் இருவரையும் துன்புறுத்தியுள்ளது விசாரணையில் உறுதியாகத் தெரியவந்துள்ளது எனவும், தாமஸ் பிரான்சிஸ் , வெயிலுமுத்து உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை ஆகியோரை சிறையில் அடைத்து வைக்கும் நோக்கில் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கிராம சபை கூட்டம்: புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக மக்கள் தீர்மானம்
8வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களின் மனதில் பல வித கேள்விகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 8 ஆவது ஊதியக்குழு ஆகும். தற்போதைக்கு அடுத்த ஊதியக் குழுவை அமைக்கும் எண்ணம் இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது பரிசீலிக்கப்படுவதில்லை. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்போது தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளது. எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படுமா இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்பது சங்கத்தின் கருத்தாக உள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 முதல் அமலில் உள்ளன. அதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 மற்றும் அதிகபட்சம் ரூ 56,900 ஆக உள்ளது.
8வது ஊதியக்குழு மற்றும் பழைய ஓய்வூதிய கோரிக்கை
8வது ஊதியக் குழு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை திரும்பக் கொண்டுவரப்படாவிட்டால், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம் என அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் AIDEF தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில ஊழியர்கள் கூட்டாக கலந்து கொள்ளக்கூடும். சமீபத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கூறினார்.
நிதியமைச்சக இணை அமைச்சரின் அறிக்கை இதுதான்
இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம், ‘8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்கிறதா இல்லையா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 8வது ஊதியக்குழு தொடர்பாக இதுவரை எந்த திட்டமும் அரசுக்கு இல்லை என்றார். ‘ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2014ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இது 2016 இல் செயல்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு, 10 ஆண்டுகள் வரை காத்திருக்காமல் சம்பள மேட்ரிக்ஸ் மதிப்பாய்வு செய்யப்படக்கூடும்’ என்று அவர் தெரிவித்தார்.
அகவிலைப்படியின் பங்கு என்ன?
ஜெசிஎம்- இன் தேசிய கவுன்சிலின் கூற்றுப்படி, சம்பள கமிஷனின் பரிந்துரைகளின்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள திருத்தம் நடைபெறுகிறது. அகவிலைப்படிக்கும் (டிஏ) இதில் பங்கு உண்டு. டிஏ 50 சதவீதத்தை தாண்டும்போது, அது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும்.
இருப்பினும், இது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மட்டுமே நடக்கிறது. இது பல சலுகைகளையும் சேர்க்கிறது. ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் தரப்பு) சிவ கோபால் மிஸ்ராவின் கருத்துப்படி, அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும். இருப்பினும், 8வது ஊதியக்குழு அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. இதில் இருந்து அரசு பின்வாங்கினால் அல்லது புதிய விதிமுறைகளை கடைபிடித்தால் மத்திய, மாநில ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
2024 வரை காத்திருக்க வேண்டும்
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஜெசிஎம் கவுன்சில் நிலை-2 மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகியவை மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை சரியான நேரத்தில் அமைக்கும் என்று நம்புகின்றன. பரிந்துரைகளுக்கு இன்னும் நேரம் உள்ளது. அதேபோல, 2026 வரை அமல்படுத்த கால அவகாசம் உள்ளது. அதற்கு முன் 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். அதுதான் சரியான நேரமாக இருக்கும், அப்போது அரசின் நோக்கம் என்ன என்பது தெளிவாகும். அப்போதுதான் சங்கமும் கோரிக்கையை எழுப்பும்.
அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கும்
48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 63 லட்சம் ஓய்வூதியதாரர்களும் தங்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர். ஜூலை 2022க்கான அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்பது சமீபத்தில் ஏஐசிபிஐ- இன் தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் கீழ் 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கொடுப்பனவை நான்கு சதவீதம் அதிகரித்த பிறகு, டிஏ விகிதம் 38 சதவீதத்தை எட்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி சூத்திரத்தில் மாற்றம், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ