தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து இருந்தது, அத்துடன் இதற்கானப் பணிகளையும் அரசு தற்போது தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது. மேலும் மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | போதை பொருள் விற்பனையில் பாஜகவினர் - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு


இதற்கிடையே, ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது இன்று முதல் தொடங்கி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை தினத்தை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்ப்பட்டது.


பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 


இதற்கிடையில் மக்களின் சந்தேகதிற்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று வாரியம் தெரிவித்துள்ளது, மேலும் கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆதார் அட்டையை TANGEDCO இ-பில் எப்படி இணைப்பது?


* முதலில் TNEB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://nsc.tnebltd.gov.in/adharupload/ ஐப் பார்வையிடவும்.


* அங்கு ஆதார் இணைப்புக்கான படிவம் இருக்கும், அதில் உங்கள் TANGEDCO சேவை இணைப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.


* பின்னர் OTP ஐ உருவாக்குவதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த வேண்டும்.


* OTP ஐ உள்ளிட்டு உங்கள் TANGEDCO கணக்கைச் சரிபார்க்கவும்.


* அதன்பின் குடியிருப்போர் விவரங்களை உள்ளிடவும்.


* TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.


* பின்னர், ஆதாரில் உங்கள் பெயரை உள்ளிடவும், அதன் பின் உங்கள் ஆதார் ஐடியைப் பதிவேற்றவும்.


* இறுதியாக படிவத்தைச் சமர்ப்பித்து, ஒப்புகை ரசீதைப் பதிவிறக்கவும்.


மேலும் படிக்க | உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ