ஆதார் அட்டை புதுப்பிப்பு: நமது நாட்டை பொறுத்தவரை ஆதார் அட்டை குடிமக்களின் மிகப்பெரிய அடையாளச் சான்றாகும். எந்த ஒரு முக்கிய பணிக்கும் இது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகையால் அதன் பாதுகாப்பு மிக முக்கியமானது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண்ணை வழங்குகிறது. அதில் கைரேகை, கருவிழி மற்றும் முகப் படங்கள் ஆகிய பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் உள்ளன.
தரவு தனியுரிமை மற்றும் இணைய மோசடி குறித்த அச்சம் இந்நாட்களில் அதிகரித்து வருகின்றது. அதன் அடிப்படையில், அவரவர் பயோமெட்ரிக் விவரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
UIDAI பயோமெட்ரிக் விவரங்கள் லாக் - அன்லாக் அம்சம்
யுஐடிஏஐ, ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய அம்சத்தை வழங்குகிறது. அதன் மூலம் அவர்கள் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்யலாம், அன்லாக் செய்யலாம். இது உங்கள் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும். விவரங்களை பயனர் லாக் செய்தவுடன், அதை தாங்கள் பார்வையிட வேண்டும் என்றாலும், அன்லாக் செய்த பின்னரே அதை செய்ய முடியும். லாக் செய்யபட்ட பயோமெட்ரிக் விஷயத்தில், யாராவது எந்த வகையான அங்கீகார சேவையையும் அணுக முயற்சித்தால், அதில் 330 என்ற பிழைக் குறியீடு தோன்றும், மேலும் உங்கள் தரவு பாதுகாப்பாக இருக்கும்.
பயோமெட்ரிக் விவரங்களை எவ்வாறு லாக் செய்வது
ஸ்டெப்-1
UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று My Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | இலவசமாக அப்டேட் ஆகும் குழந்தைகளுக்கான ஆதார் கார்ட்: முழு விவரம் இதோ
ஸ்டெப்-2
Aadhaar Services-ஐ தேர்ந்தெடுத்து Secure Your Biometrics என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப்-3
Lock/Unlock Biometrics-ல் கிளிக் செய்து உங்கள் 12 இலக்க தனிப்பட்ட ஆதார் எண்ணை உள்ளிடவும். இதற்குப் பிறகு, நீங்கள் கேப்ட்சாவை சரிபார்க்க வேண்டும். இப்போது Send OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப்-4
ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
ஸ்டெப்-5
லாக் / அன்லாக் -ல் கிளிக் செய்து லாக்-ஐ உறுதிப்படுத்தவும். இதன் பிறகு உங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் லாக் செய்யப்படும்.
அடுத்த முறை ஆதாரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தும்போது, அதைத் தனியாகத் அன்லாக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முழு செயல்முறையும் லாக் செய்வதைப் போலவேதான் இருக்கும். அன்லாக் செய்ய இறுதியில் 'அன்லாக்' ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | வாட்ஸ் ஆப் வழியாக ஆதார், பான் கார்டு பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ