தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாளாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தாளில் 100-க்கு 25 மதிப்பெண் பெற்றால்தான் 2ஆவது தாள் திருத்தப்படும். பணி நியமனத்திற்கு 2ஆவது தாள் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முதல் தாள் மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்ணாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். குரூப்-2 பிரதான தேர்வில் முதல் தாள் காலையிலும், 2 ஆம் தாள் மதியத்திலும் நடத்தப்படும்.


சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் குரூப்-2 தேர்வில் தற்போது சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும். வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பின்பே முதனிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து டிஎன்பிஎஸ்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.