தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வுக்கான முடிவகள் வெளியானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் முடிவுகள் முதன்முறையாக ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகளை http://www.tnpsc.gov.in/results.html என்ற இணைப்பில் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் நாள் நடைப்பெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்.


இதைத்தொடர்ந்து இதற்கான உத்தேச விடைகள் நவம்பர் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த முறை விடைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அவற்றை மறுத்து இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.


இதற்கு முன்னதாக, இது போன்ற கோரிக்கைகள் எழுத்துப்பூர்வமாகவே அதாவது கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவே பெறப்பட்டு வந்தன. இதனால், தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுவதால் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்கள் முக்கிய தேர்வுக்கு விண்ணப்பிக்க உரிய ஆவணங்களின் நகலினை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது.