14 TNPSC தேர்வு முடிவுகள் ஜூன் 8ல் வெளியீடு!
ஜூன் 8ஆம் தேதி மீதமுள்ள 14 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2020ல் நடந்த துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியான நிலையில் ஜூன் 8ஆம் தேதி மீதமுள்ள 14 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகம் (Tamil Nadu) முழுவதும் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு (Lockdown) அமலாகி உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ALSO READ | TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதி, நாள், தேர்வு என்ன தெரியுமா?
இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுகள் அவ்வபோது ஒத்திவைக்கப்பட்டது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோய் காரணமாக, தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த தேர்வுகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது 2020 டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளில் ஏற்கெனவே 129 தேர்வுகளின் முடிவுகள் 8ஆம் தேதி வெளியான நிலையில் மீதமுள்ள 14 தேர்வுகளின்முடிவுகள் வருகிற ஜூன் 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR