TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC Group 4 Hall Ticket Download Procedure : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்விக்கெட், அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை எப்படி டவுன்லொட் செய்வது?
TNPSC Group 4 Hall Ticket Download Procedure : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அனுமதி சீட்டினை (ஹால் டிக்கெட்) அரசு வெளியிட்டிருக்கிறது. இது குறித்து வெளியாகியிருக்கும் அரசாணையில் அதை எந்த தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனும் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசாணை:
09.06.2024 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி- IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு.
செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை(OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அரசானையில் கூறப்பட்டிருகிறது.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
>TNPSC தளத்தை உங்கள் தேடுதளத்தில் தேடவும்
>Important Lingks என்பதற்கு கீழ் Hall Ticket Download என்ற லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும்
>உங்களை அது வேறு பக்கத்திற்கு கொண்டு செல்லும்.
>வேறு பக்கத்தில் காண்பிக்கும் ‘One Time Registration’ என்பதை செலக்ட் செய்யவும்.
>அதில் உள் நுழைவதற்கான டேப் திறக்கும். அதில், Register User எனும் டப்பாவில் உங்களிடம் இருக்கும் தகவலகளை பதிவிடவும்.
>உங்கள் பிறப்பு தேதியையும் அதில் கேட்கும் இடத்தில் பதிவிட வேண்டும்.
>சிறிது விநாடிகளில் உங்கள் ஹால்டிக்கெட் வந்துவிடும். இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து, ஒரு காப்பியாக கையில் வைத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மே 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வு வரையரை:
எழுத்து தேர்வு:
முதலில் எழுத்துத்தேர்வு நடைபெறும். பொது அறிவு, மொழிப்பாடத்தேர்வு, திறன் கண்டறியும் சோதனை உள்ளிட்டவை நடைபெறும்.
ஆவணம் சரிபார்ப்பு:
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு, சான்றிதழ்களை சரிபார்க்கும் வேலை நடைபெறும். இதில், தேர்வாளர்கள் தங்களின் ஆவணங்களை சரியாக சமர்பிக்க வேண்டும்.
தேர்வு எப்போது?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க | கேரள அரசு புதிய அணை கட்ட கூடாது - தமிழக விவசாயிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ