தமிழக அரசுப் காலிப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியின் தகுதிகேற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது தேர்வு நடைமுறைகளில் பல்வேறு சீர்த்திருந்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரூப் 1 மற்றும் குரூப் 2 பணிகளுக்கு (TNPSC) தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்பது கட்டாயமாக இருந்து வருகிறது. அதில் கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, முக்கிய பதவிகளில் தேர்வர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக, குரூப் 2-வில் தேர்ச்சி பெறுபவர்கள், நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.


ALSO READ | டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்


உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பணியிடங்களுக்கு குரூப் 2 ஏ மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், குரூப் பி பணிகளுக்கு நடைமுறையில் இருக்கும் நேர்முகத் தேர்வை நீக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு மற்றும் ரயில்வே வாரியம் குருப் பி பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளை நீக்கிவிட்டு, மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணியமர்த்தி வருகிறது.


அதனை பின்பற்றி தமிழக அரசும் குருப் 2வில் இருக்கும் பெரும்பாலான பணிக்களுக்கு நேர்முகத் தேர்வை நீக்கிவிட்டு, அந்தப் பணிகளை குரூப் 2 ஏ தேர்வுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஊதிய விகிதத்துக்கு மேல் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு நீக்கப்பட்டு, அந்தப் பதவி காலிப் பணியிடங்கள் குருப் 2 ஏ தேர்வு மூலம் நிரப்பபடும் என எதிர்பார்க்கபடுகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு, தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, புதிய மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி செய்து வருகிறது.


ALSO READ | TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதி, நாள், தேர்வு என்ன தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR