TNPSC Recruitment 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC -Tamil Nadu Public Service Commission) காலியாக உள்ள Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2023 முதல் 10.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள்


மொத்தம் மூன்று துறைகளுக்கு ஆட்டகள்ஆட்கள் சேர்ப்பு நடைபெறவுள்ளது. வேளாண் அலுவலர் பதிவிக்கு 33 + 4 என 37 இடங்களும், வேளாண் உதவி இயக்குனர் பதவிக்கு 8 இடங்களும், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 41 + 7 என 48 இடங்களுக்கும் பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளனர்.


மாத சம்பளம்


வேளாண் அலுவலர் பதிவிக்கு ரூ.37,700 - ரூ.1,38,500 வரையும், வேளாண் உதவி இயக்குனர் பதவிக்கு ரூ.56,100 - ரூ.2,05,700 வரையும், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு ரூ.37,700 - ரூ.1,38,500 வரையும் மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


வயது வரம்பு


SCs, SC(A)s, STs,MBC/DCs, BC(OBCM)s,BCMs மற்றும் விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்களுக்கு பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Recruitment 2023: ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!


கல்வித்தகுதி


வேளாண் அலுவலர் பதிவிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agriculture) மற்றும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். வேளாண் உதவி இயக்குனர் பதவிக்கு வேளாண்மை விரிவாக்கம் அல்லது விவசாயப் பொருளாதாரத்தில் எம்.எஸ்சி. பட்டம் (M.Sc., Degree) பெற்றிருக்க வேண்டும். தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு தோட்டக்கலைப் பிரிவில் பி.எஸ்சி. (B.Sc., Horticulture) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்


பதிவு கட்டணம் (Registration Fee) - ரூ.150/, தேர்வுக் கட்டணம் (Written Examination Fee) - ரூ.200 மற்றும் SC/ ST/ PWD/ விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.tnpsc.gov.in/) அறிந்து கொள்ள முடியும். 


மேலும் படிக்க: பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் பணம் சம்பாதிக்க 6 வழிகள்!


நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் வேளாண் அலுவலர், வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர்.
அறிவிப்பு தேதி 12.01.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம் பதிவு கட்டணம்ரூ.150/- தேர்வுக் கட்டணம் - ரூ.200
காலியிடங்கள் 93
கல்வித்தகுதி B.Sc, M.Sc.,
சம்பளம் மாதம் ரூ.37,700 முதல் ரூ.2,05,700 வரை
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
வயது வரம்பு 32 முதல் 34
தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு / நேர்காணல்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/
வேலைவாய்ப்பு வகை  தமிழ்நாடு அரசு மணி (Tamil Nadu Govt Jobs 2023)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ