பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்க சொல்லி அதிகாரிகள் அழுத்தம் - உருக்கமான வீடியோ
TNPSC : கன்னியாகுமரி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்க சொல்லி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கன்னியாகுமரி தேரூர் பகுதியைச் சேர்ந்தவர் கோலப்பன். இவர் தொலைதூர அரசு பேருந்தை இயக்கி வருகிறார். சம்பவத்தன்று அவர் இயக்கி சென்ற பேருந்தில் ஏசி இயங்காததால் பயணிகள் பிரச்சனை செய்ததாகவும் ; அதனால் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும், பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்க சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் ; அந்த பேருந்துகள் பழுதாகி வழியில் நின்றால் தங்களுக்கு தண்டனை கொடுப்பதாகவும் கூறுகிறார்.
அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தங்களுக்கு தண்டனை கொடுப்பதாகவும் அதிகாரிகள் தவறு செய்தால் எந்த தண்டனையும் கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார். எங்களுக்கும் குடும்பம் உள்ளது எங்களை நம்பி பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வருத்ததோடு பேசுகிறார். இதனிடையே, வன்னியபெருமாள் என்ற ஏயி எந்த பேருந்தையும் பராமரிக்காமல் பராமரிப்பதற்காக, விருது வாங்கி இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க | ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ
இதனிடையே, அழுது கொண்டே ஓட்டுனர் கோலப்பன், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், கன்னியாகுமரி ராணி தோட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர் ஷிபு இதே போல் பேசி வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு போக்குவரத்து ஊழியரின் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது,
மேலும் படிக்க | தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ