தமிழகத்தில் தமிழ் வருட பிறப்பையொட்டி நாளையும், புனித வெள்ளியையொட்டி நாளை மறுதினமும் அரசு விடுமுறை ஆகும். இதனையடுத்து வார விடுமுறை வருவதால் தொடர் விடுமுறைக்காக அதிக அளவிலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்


இதனைத் தொடர்ந்து, தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னையில் இருந்து கூடுதலாக ஆயிரத்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம், கோவை, நாகை, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து வரும் ஏப்ரல் 17-ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதே போன்று உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இன்று முதல் 19-ம் தேதி வரை மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சித்திரை திருவிழாவுக்கு வந்து செல்ல வசதியாக 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


மேலும் படிக்க | மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற நித்யானந்தா - பிரசாதம் வாங்க முண்டியடித்த பக்தர்கள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR