பொங்கல் திருநாளின் மூன்றாவது நாளான காணும் பொங்களை முன்னிட்டு கடற்கரை மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவது வழக்கம். சென்னையை பொறுத்தவரை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதைதொடர்ந்து, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு வசதிகளையும் செய்துள்ளனர். மருத்துவக்குழுவினரும், மீட்புபணிக்காக தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் இருக்கும்.


இதை தொடர்ந்து, உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் 6 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கோபுரங்களில் தலா 2 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.


பாதுகாப்பு கருதி கடலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தற்காலிக  தடுப்பு வேலிகள் கடற்கரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.


மேலும் குதிரைகளில் போலீசார் சவாரி செய்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.