தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி. சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிவாதம் நடைபெருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 


கடைசியாக மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1-ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.  இவர்கள் முன்னால் இறுதி வாதம் வைக்கப்பட உள்ளது. 


கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா இறுதி வாதத்தை முன் வைக்கிறார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பினர் வாதம் நடைபெறும். மேலும் சுப்ரமணியன் சுவாமி தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தருமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.