TN SSLC Result 2021: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை http://tnresults.nic.in, http://results.gov.in, http://dge.tn.nin.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண்ணை பதிவேற்றம் செய்து தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் (TN DGE) தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவர்கள் தங்கள் TN மதிப்பெண் பட்டியலை tnresults.nic.in, results.gov.in, dge1.tn.nic.in அல்லது dge2.tn.nic.in மூலம் சரிபார்க்கலாம். தமிழ்நாடு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2021 மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு 10 வது மாணவர்களின் பதிவு விவரங்களை பதிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆண்டு, தமிழகம் 10 ம் வகுப்பு முடிவுகளுக்காக 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கின்றனர்.


10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிகமாக இருந்ததால், பல மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அட்கேபோல தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மற்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டனர் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.


இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR