தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த மாதம் வரை தக்காளி,  ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தக்காளி விலை உயர்வு-படிப்படியாக மாற்றம்..


தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தக்காளியின் விலை சில நாட்களுக்கு முன்பு கடுமையாக உயர்ந்தது. ஆனால், கடந்த சில வாரங்களில் தக்காளியின் வரத்தை பொறுத்து அதன் விலை ஏறுமுகம் இறங்குமுகமாய் உள்ளது. தமிழ்நாட்டில் இன்று இருக்கும் தக்காளி விலை நாளை இருப்பதில்லை. சென்னையில், சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை தமிழகத்தில் ஆங்காங்கே கணிசமாக குறைந்து வருகிறது. சில ரக தக்காளி வகைகளை பொருத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 


இன்றைய விலை நிலவரம்: 


இந்த வாரத்தின் தொடக்கத்தில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.70 முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதற்கு முன்பு வரை தக்காளி, கிலோவிற்கு ரூ.150-140 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தது. இன்று, சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை சரமாரியாக சரிந்துள்ளது. நேற்று கிலோவிற்கு 40 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி, இன்று 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தக்காளி கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதர சந்தைகளில் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் ஆனந்த கடலில் ஆழ்ந்துள்ளனர். 


மேலும் படிக்க | இனி கொடைக்கானலில் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை!


காய்கறி விலை நிவலரம்: 


>பெரிய வெங்காயம் 30
>சின்னவெங்காயம்35,50
>பீன்ஸ் 50
>கேரட் 40
>பச்சை மிளகாய் 457.இஞ்சி 220
>கோஸ் 10.15
>உருளைக்கிழங்கு17,25
>கத்திரிக்கா 25
>முள்ளங்கி 10
>புடலங்காய் 15
>முருங்கக்கா 20
>பீட்ரூட் 18
>தேங்காய் kg 26.No1.10
>குடை மிளகாய் 35,50
>கொத்தவரை 40,20
>பாவக்காய் 30
>மீடியம் தக்காளி 15kg.BOX200
>வரி கத்திரிக்கா 15
>சேனைகிழங்கு 40.30
>சேப்பங்கிழங்கு 30.20
>பெங்களூர் மாங்கா 180
>நாட்டு மாங்கா  80


விலை உயர்வு காரணம் இதுதான்..! 


கடந்த இரண்டு மாதங்களில் தக்காளியின் விலை இமாலய உச்சத்தை தொட்டது. இதற்கு காரணம் இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை விட்டுவிட்டு வேறு காய்கறிகளை பயிரிட்டதுதான் என சில ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூச்சுகளின் தாக்குதலால் தக்காளி பழுதடைந்து விவசாகியகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் தக்காளியை விட்டுவிட்டு வேறு பயிர்களை பயிரிட்டனர். உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில்தான் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. 


பலத்த மழையினால் வரத்து பாதிப்பு…


இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தக்காளி உள்பட பல காய்கறிகளை பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுவும் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி அனைத்து மாநிலங்களுக்கும் ஒழுங்காக காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதனால் அவற்றி வரத்தும் அனைத்து பகுதிகளிலும் தக்காளியின் வரத்தும் அதிகரித்துள்ளது. 


மேலும் படிக்க | கலைஞருக்காக உருவாக்கிய 6 அடி பேனா சின்னம்: லேத் தொழிலாளி அசத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ