பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு ஆகியவற்றின் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த வாரம் ரூ60 முதல் ரூ 80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ105 முதல் ரூ125வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவங்கள் நடத்துபவர்கள் தக்காளி வாங்கும் அளவை கணிசமாக குறைத்துள்ளனர்.
தக்காளியின் விலை கேட்டதும் அதிர்ச்சியடையும் இல்லத்தரசிகளும் தக்காளி வாங்குவதை குறைத்து கொண்டிருக்கிறார்கள். சரியாக ஒரு மாதம் முன்பு ரூ30 முதல் ரூ60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி கோடை காலத்தில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையின் காரணமாக தக்காளியின் உற்பத்தியில் தடை ஏற்பட்டது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டுறவுத்துறை நடத்திவரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 2711.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1100 மெட்ரிக்டன் அளவிற்கும் ரூ.4 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45/- முதல் ரூ.55/- வரை விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க | நா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! கோலியின் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!
தற்பொழுது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.90/-முதல் ரூ.120/-வரை வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுவர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக இன்று (19.05.2022) 4 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு. ஒரு கிலோ ரூ.70/-முதல் ரூ.85/-வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை நாளை முதல் அணைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை துவர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, மக்கள் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தரமான தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவான விலையில் வாங்கி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe