ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் அணியும் விளையாடியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இரண்டாவது பேட்டிங் செய்வது தான் தங்கள் அணிக்கு பலம் என்று தெரிந்தும் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு உள்ளதால் கடுமையாக போராட தயாராக இருந்தது.
.@gujarat_titans have won the toss and they will bat first against #RCB
Live - https://t.co/XDXRjk2XBc #RCBvGT #TATAIPL pic.twitter.com/ruWHoEqfsL
— IndianPremierLeague (@IPL) May 19, 2022
மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய அம்பயர்! கடுப்பாகி பேட்டை உடைத்த மேத்யூ வேட்!
குஜராத் அணி ஓப்பனிங் பேட்ஸ்மேன் கில் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்பு களமிறங்கிய மேத்யூ வேட் 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை அடித்திருந்தார். பின்பு, அம்பயரின் சர்ச்சையான முடிவால் அவுட் ஆகி வெளியேறினார். டிரசிங் ரூமில் அவர் பேட்டை கீழே தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. சஹாவும் 31 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்பு ஜோடி சேர்ந்த பாண்டியா மற்றும் மில்லர் அதிரடி காட்டினர். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. கடைசியில் ரசித்கான் அதிரடி காட்ட 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் குவித்தது.
Innings Break!@gujarat_titans post a total of 168/5 on the board.#RCB chase coming up shortly.
Scorecard - https://t.co/TzcNzbrVwI #RCBvGT #TATAIPL pic.twitter.com/g7k6jYEA7f
— IndianPremierLeague (@IPL) May 19, 2022
சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. கேப்டன் பாப் மற்றும் விராட் கோலி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினர். இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வந்த கோலி இந்த போட்டியில் பழைய பார்மிற்கு திரும்பினார். தனது சிறப்பான பேட்டிங்கினால் இந்த சீசனில் தனது 2வது அரை சதத்தை பதிவு செய்தார். 54 பந்துகளில் 2 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்களை குவித்தார். மறுபுறம் ஃபாஃப் டு பிளெசிஸ் 44 ரன்களை குவித்தார். பின்பு களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடி காட்ட ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 170 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. தற்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் டெல்லி அணி அடுத்த போட்டியில் தோற்றால் மட்டுமே ஆர்சிபியின் பிளே ஆப் கனவு நனவாகும்.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியில் விலகிய வில்லியம்சன் - சன்ரைசர்ஸூக்கு பின்னடைவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR