சென்னையில் வசிப்பவர்களுக்கு அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசல் என்பது தினசரி வாழ்க்கையின் அங்கமாகிப்போன  ஒன்று. அலுவலக நேரத்தில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டைக்கு பயணிப்பவர்கள் எந்த சிக்னலையும் நிச்சயமாக ஒரே முறையில் கடக்க இயலாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புகள் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி மிகுந்தவை. இந்த போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதற்காக, நந்தனம் சிக்னல் அருகே 10 நாட்களுக்கு சோதனை முறையில் போக்குவரத்தில் மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | சென்னையில் 30 நிமிட பயணம் இனி 4 நிமிடத்தில்..! தமிழக அரசின் சூப்பர் பிளான்!



இதன்படி, வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன்  “யு டர்ன்” செய்து தங்கள் இலக்கை அடையலாம்.


அடுத்ததாக, செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை-செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று டொயாட்டோ ஷோரூம் முன் “யு டர்ன்” செய்து சென்று அவர்கள் சேருமிடத்தை அடையலாம்.


இதே போன்று பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்ற, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டொயட்டோவுக்கு முன்னால் “யூ டர்ன்” செய்து செல்லலாம். மேலும் இது தொடர்பான ஆலோசனைகளுக்கு dcpsouth.traffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை ரூ.485 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நேர்மையாக பணிசெய்யும் டிராஃபிக் போலீஸுக்கு ‘கிஃப்ட்’ கொடுத்த 6 வயது சிறுமி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR