சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வளர் டிராப்பிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. முன்னதாக இது அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருந்தது.


சிலை கடத்தல் வழக்குகளை IG பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகின்றது. வேலூர் கோவில் சிலை திருட்டை கண்டுபிடித்த இவர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வந்தவர்.


இவரது தலைமையிலான விசாரணை குழுவிடம் இருந்து இந்த வழக்கினை CBI விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் உள்பட தமிழக கட்சி தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வளர் டிராப்பிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்!