சென்னை: லிப்டில் சிக்கி உயிரிழந்த 23 வயது இளைஞர் - 15 நாளில் மணப்பெண் மரணம்
துரைப்பாக்கம் Zepto நிறுவனத்தில் 23 வயது இளைஞர் லிஃப்டில் சென்றபோது தலைமோதி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர், பிஞ்சிவாக்கத்தில் திருமணமாகி 15 நாளில் குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது புதுப்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னை துரைப்பாக்கம் பர்பா காலணி, 2வது பிரதான சாலையில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த 23-வயதுடைய இளைஞர் ஶ்ரீநாத் கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வரும் Zepto என்ற நிறுவனத்தில் கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். பொருட்களை மேலே ஏற்றி செல்லும் loading Lift-ல் நின்று கொண்டிருந்தவர் மேல் மாடியில் நின்ற நபர் கொடுத்த Invoice Bill-ஐ வாங்குவதற்கு loading Lift- மீது ஏறி சென்றவர் மேலே தலை இடித்து லிப்டில் சிக்கி இறந்துள்ளார்.
இதைப் பார்த்த உடன் பணிபுரிந்தவர் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் போலீசார் ஶ்ரீநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | மீட்கப்பட்ட 2 பேரின் உடல்! வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி?
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் லிப்டில் மாட்டிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் திருமணமாகி 15 நாளில் குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது புதுப்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி( வயது 18) என்றவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று அங்கு இருந்த ஹீட்டரை போட முயன்றார்.
அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் தாக்கி திருமணமான 15 நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | மின்னஞ்சல் மூலம் இளம் பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய வாலிபர் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ