ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் பாலத்திற்கு இன்று முதல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் 4-ஆம் நாள்  ஏற்பட்ட பழுதை அடுத்து ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளனார்கள்.


இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து 84 நாட்களுக்கு பின்னர் தற்போது பாம்பன் தூக்குப்பாலத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.



சுமார் 6.5 டன் இரும்பு ராடுகளை கொண்டு ரயில் பாதையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டதுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து, அனைத்து ரயில்களும் வழக்கம் போல இன்று முதல் ராமேஸ்வரம் வந்து செல்லும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இன்று தொடங்கிய ரயில் சேவை 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.