3 நாட்களில் பொங்கல்! போராட்டத்தால் அவதி படும் மக்கள்!
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்தப் போராட்டம் 8வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்தப் போராட்டம் 8வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் நேற்று பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவது நடைபெற்று வரும் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 சதவீத பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இந்த போராட்டத்தின் காரணத்தால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வெளியூா்களில் பணியாற்றக்கூடிய நபா்கள் சொந்த ஊா் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.