திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகள்..!
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி விமான நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் மேம்படுத்தப்படுவதன் மூலம், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சர்வதேச விமான சேவை கிடைக்கும். இது வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விமான நிலையம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் நட்பு விமான நிலையமாக நான்கு ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். மேலும், இந்த விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும்.
மேலும் படிக்க | திருச்சி வந்த பிரதமர் மோடி.. உற்சாகமாக வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!
75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்தின் அமைப்பு பறவை வடிவில் இருக்கும். விமான நிலையத்துக்கு உள்ளே தமிழ்நாட்டின் பழமையை பறைசாற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் மற்றும் புராதனச் சின்னங்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களின் புகைப்படங்கள் உள்ளன. ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்தில் இருக்கும் பயணம் மேற்கொள்ள முடியும். ஒரு மணி நேரத்தில் 3500 பயணிகளை கையாள முடியும். அத்துடன் ஒரே நேரத்தில் 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பேருந்துகள் ஆகியவற்றை நிறுத்த இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மொத்தம் 16 வழிகள் இருக்கிறது.
பரந்து விரிந்த விமான நிலையத்தை கண்காணிக்கும் வகையில் 360 டிகிரி கோணத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரம் மூலம் விமான நிலையத்தை முழுமையாக கண்காணிக்க முடியும். திருச்சி விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை அங்கிருந்தே தயார் செய்யும் வகையில் மூன்று மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ள சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. 47 செக் இன் கவுண்டர்கள், 10 போர்டிங் பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
விமான போக்குவரத்தை கண்காணிக்கும் கண்ட்ரோல் ரூம், சப்போர்ட் செய்யும் கருவிகள் கொண்ட ரூம், ரேடர்கள், ரேடார் சிமுலேஷன், ஆட்டோமேஷன், விஹெச்எஃப், மற்றும் ஏஏஐ அலுவலகங்கள், மெட்டாலஜிக்கல் அலுவலகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சர்வதேச தரத்தில் இருக்கும் இந்த விமான நிலையம் வெளிநாடுளில் பணியாற்றி நாடு திரும்பும் தென் தமிழக மக்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிரதமர் மோடி முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? அந்த பாயிண்டு முக்கியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ