திருச்சி போலீஸ் கொலை : 2 சிறுவர்கள் கைது
பிடிபட்ட 3 கொலையாளிகளில் 2 பேர் சிறுவர்கள் என்பதும் மேலும் தலைமறைவான ஒரு குற்றவாளியை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்றிரவு வழக்கம் போல் நவல்பட்டு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்திருக்கிறார்கள். இதனை பார்த்த எஸ்.ஐ பூமிநாதன் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.
இதையடுத்து எஸ்.ஐ பூமிநாதன், அவர்கள் ஆடுகளைத் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை விரட்டிச் சென்றிருக்கிறார். சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் துரதித்தி சென்றவர்களை பிடித்தது விட்டதாக தகவல் கொடுத்தும் இருக்கிறார். தகவலின்படி எஸ்எஸ்ஐ சித்ரவேல் மற்றும் கீரனூர் போலீஸ் சேகர் இருவரும் சம்பவ இடத்திற்கு பார்த்த போது, எஸ்எஸ்ஐ பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ALSO READ | திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஆடு திருடர்களை பூமிநாதன் விரட்டி செல்வதும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து திருடர்கள் மட்டும் திரும்பி செல்வதும் போன்ற காட்சிகளின் அடிப்படையில் பழைய குற்றவாளிகளை பிடித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேரை கொலைவழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 19 வயதான மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவர்கள் 2 பேர் சிவகங்கை மாவட்ட எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட 3 கொலையாளிகளில் 2 பேர் சிறுவர்கள் என்பதும் மேலும் தலைமறைவான ஒரு குற்றவாளியை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது.
கொலையாளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த திருச்சி தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
ALSO READ | கொலையான எஸ்.ஐ. பூமிநாதனின் கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்.. நடந்தது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR