சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின்தான் தற்போது ஹாட் டாபிக். சீட் கொடுக்கப்பட்டதற்கே பலர் விமர்சனங்கள் வைக்க எதுவுமே பேசாமல் வென்றார் உதயநிதி. அதனையடுத்து அவர் அமைச்சராக வேண்டுமென அவரது நண்பரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பேச்சை ஆரம்பித்துவைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து பலரும் உதயநிதி அமைச்சராக வேண்டுமென குரல் எழுப்ப தொடங்கினர். ஒருபடி மேலே சென்று சட்டப்பேரவையிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு பத்திரத்தை எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைவருமே வாசிக்க உதயநிதி திமுக அமைச்சராவார் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டது.



அதேபோல்,துர்கா ஸ்டாலின் தரப்பிலிருந்து உதயநிதியை அமைச்சராக்க அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அமைதி காத்துவருகிறார். 


அதேசமயம், உதயநிதி அளவுக்கு மீறி முன்மொழியப்படுவதால் கட்சியின் சீனியர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள் என்ற பேச்சும் எழுந்தது.



இந்நிலையில் உதயநிதி அமைச்சரவாதற்கான முதல் விதையை அவரது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று போட்டிருக்கிறார். திருச்சி தெற்கு மாவட்டக்  கழக செயற்குழுக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர், தெற்கு மாவட்ட கழக  பொறுப்பாளருமான,  அன்பில் மகேஷ்  பொய்யாமொழி  தலைமை தாங்கினார்.



ஜூன் மூன்றாம் தேதி  கலைஞர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கட்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் உதயநிதி அமைச்சராவது உறுதியாகியிருக்கிறது.



சூழல் இப்படி இருக்க உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதற்காக இயற்றப்பட்ட தீர்மானம் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கட்சி பணி ஆற்றி, தேர்தல் பணி ஆற்றி, அளவுக்கு மீறி செலவு செய்து பலர் காத்திருக்க உதயநிதிக்கு எப்படி உடனடியாக அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்திருக்கிறதாம். 


மேலும் படிக்க | மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!


அதுமட்டுமின்றி அன்பில் தனியாக ஒரு லாபி செய்துகொண்டிருக்கிறார். உதயநிதியை அமைச்சராக்கினால் ஏதேனும் ஒரு இலாகா ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அப்போது எப்படியும் ஒரு அமைச்சரின் பதவியோ இல்லை ஏதேனும் ஒரு இலாகாவோ பறிபோகும். 


அப்படி விட்டுக்கொடுக்கும் நிலை வந்தால் அன்பில் மகேஷ் தனது இலாகாவை விட்டுக்கொடுத்து அவரது நண்பரை அமைச்சராவாக்குவாரா என சீனியர்கள் சிலர் முணுமுணுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முணுமுணுப்பு பெரிய சத்தமாக எழுவதற்குள் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடந்துவிடும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.  


மேலும் படிக்க | தமிழகத்தில் தயாராகி ராணுவம் செல்லும் துப்பாக்கிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR